பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

கங்கையைக்காட்டிலும் காவிரி புனிதமானது என்று பெருமைப்படுகிறார். -

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த பாசுரங்களும் அரங்கத்தம்மானைப்பற்றியவைகளேயாகும். "நிமலன், நின்மலன், நீதி வானவன், நீள்மதிள் அரங்கத்தம்மான்' என்றும், "காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான்” என்றும், 'மதுரமா வண்டு பாட, மாமயிலாட ரங்கத்தம்மான்” என்றும் “வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர்” என்றும் பண் இசைத்துப் பாடி மகிழ்கிறார்.

மதுரகவி யாழ்வார் பாடியுள்ள 'கண்ணி துண் சிறுத்தாம்பு” என்று தொடங்கும் பாசுரங்கள் நம்மாழ்வார் பற்றிய சிறப்புமிக்க பாசுரங்களாகும். தமிழ்மணம் மிக்க இனிய பாடல்களாகும்.

“கண்டு கொண்டென்னைக் காளிமா றப்பிரான்

பண்டை வல்வினை மாற்றி யருளினான் எண்டி சையும் அறிய இயம்புகேன் ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே” என்றும்,

“அருள்கொண் டாடும் அடியவர் இன்புற

அருளி னான்.அவ் வருமறை யின்பொருள் அருள்கொண் டாயிரம் இன்தமிழ் பாடினான் அருள்கண் டீர்.இவ் வுலகினில் மிக்கதே!” என்றும் அருமையாகப் பாடியுள்ளார்.

இப்பாசுரங்களில் "ஒண்டமிழ்ச் சடகோபன் என்றும் "அவ்வருள் நிறைந்த சடகோபனார் மறையின் பொருளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனிய தமிழ்ப் பாசுரங்களில் பாடினான் என்றும் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

திருமங்கையாழ்வார்

திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் பாசுரங்கள் மிகவும் சிறப்புத் தனித்தன்மை கொண்டவை; கருத்தாழம் மிக்கவை, உணர்ச்சியும் உணர்ச்சி வேகமும் கொண்டவை; சாதாரண மக்களும் திருமால் பெருமையைப் புரிந்து கொள்ளும்படியாக உள்ள தமிழ்ச்சுவை நிரம்பியவை.