பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சீர்வண்ண வொண்டமிழ்கள்

இவையாயிரத்துள் இப்பத்தும் ஆர்வண்ணத் தாலுரைப்பார்

அடிக்கீழ்புகு வார்பொலிந்தே" என்று பாடியுள்ளார்.

ஐந்தாம் பத்தில் "கடல் ஞாலம் செய்தேனும் யானே" என்று தொடங்கும் பாடல் தொகுதி சிறப்பு மிக்க பாசுரங்களைக் கொண்டதாகும் தம்மை எம்பெருமானாகவே கருதி உணர்ச்சி பொங்கப் பாடும் இனிய பாசுரங்களாகும்.

"கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்,

கற்கும்கல்வி யாவேனும் யானே என்னும் கற்கும்கல்வி செய்வேனும் யானே யென்னும்

கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் கற்கும்கல்விச் சாரமும் யானே என்னும்

கற்கும்கல்வி நாதன்வந் தேறக் கொல்லோ? கற்கும் கல்வியீர்க் கிவையென் சொல்லுகேன்?

கற்கும் கல்வியென் மகள்காண் கின்றவே?” என்று பாடுகிறார். இப்பாடல் தொகுதியின் முடிவாக, “கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்

குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் றன்னை வாய்ந்த வழுதிவள நாடன் மன்னு

குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்

இவையும் ஒர்பத்தும் வல்லார், உலகில் ஏய்ந்து பெரும் செல்வந்தராய்த் திருமால்

அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே” என்று பாடி முடிக்கிறார்.

ஆறாம் பத்தில் "மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார்” என்று தொடங்கும் பாசுர வரிசையில்,

"ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய்

வார்த்தையுள் சீற்ற முண்டழு கூத்த அப்பன் றன்னைக் குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையும்

ஒர்பத் திசையொடும் நாத்தன்னால் நவில உரைப்பார்க் கில்லை நல்குரவே” என்று பாடியுள்ளார்.