பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 279

ான்று இப்பாடலிலும் தமிழ் ஆயிரம் என்று ஆழ்வார் குறிப்பிட்டு ஆடிப்பாடிப் பணிமின் என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.

பத்தாம் பத்தில் "அருள் பெறுவார்' என்று தொடங்கும் பாசுரத் தொகுதியில்

"என்னெஞ்சத் துள்ளிருந்திங்

கிருந்தமிழ்நூல் இவைமொழிந்து வன்னெஞ்சத் திரணியனை

மார்விடந்த வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப்

பாண்டவர்க்காப் படைதொட்டான் நன்னெஞ்சே, நம்பெருமான்

நமக்கருள்தான் செய்வானே!" என்றும்,

“காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த வாட்டாற்றெம் பெருமானை

வளம்குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ்மாலை

ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டுஆரார் வானவர்கள்

செவிக்கினிய செஞ்சொல்லே”

என்று பாடுகிறார்.

"திருமாலிருஞ்சோலை மலை" என்னும் தலைப்பில் தொடங்கும் பாடல் தொகுதியில்

"நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்

நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும் வல்லார் தொண்ட ராள்வது சூழ்பொன் விசும்பே' என்று பாடியுள்ளார்.

இவ்வாறு நம்மாழ்வார் தமது ஒராயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் "சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம்’ என்றும், “சடகோபன் பாலேய் தமிழர் இசைகாரர்" என்றும், "சடகோபன் பண்ணிய தமிழ் மாலை ஆயிரம்" என்றும், "சோலை வழுதி வளநாடன்