பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளமும் உயிரின வளமும் 35

திவ்ய தேசங்கள், அக்கோயில்களில் குடிகொண் ருக்கும் எம்பெருமான் கோவிலைச் சேர்ந்த, அதைச் கற்றியுள்ள நீர்நிலைகள், தாவரங்கள், மரம் செடிகொடிகள், மலர்கள், வண்டுகள், பறவைகள், நாட்டின் செழிப்பு, வயல்வெளிகள், விளைபொருள்கள், மக்கள் கூட்டம், அதன் நல்வாழ்வு, விழாக்கள் முதலியனவற்றையும் இணைத்து ஆழ்வார்கள் அற்புதமாகப் பாடியுள்ளார்கள்.

திருமாலிருஞ்சோலை மலையைப்பற்றிக் "குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நீலமலை, நீண்ட மலை, பாண்தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுபருகத் தோண்டல் உடைய மலை, கனங்கொழி தெள்ளருவி வந்து கழ்ந்த கல்ஞாலமெல்லாம் இனங்குழு வாடும் மலை யென்றும், ஆயிரம் ஆறுகளும், சுனைகள் பலவாயிரமும், ஆயிரம் பூம்பொழில்களும் உடைய மாலிரும் சோலை மலையென் றெல்லாம் பெரியாழ்வார் உள்ளம் உருகப்

டுகிறார்.

"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்றும், கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து .ே சின பேச்சரவம்" என்றும், "கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலை வழியே நின்று பால்சோர மன்றும், 'உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்” என்றும், "பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்” என்றும், மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் என்றெல்லாம் திருப்பாவைப் பாடல்களில் காண்கிறோம்.

"காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டியரிசி அவலமைத்து” என்றும், “புன்னை குருக்கத்தி ஞாழல் .ெ ருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே’ என்றும், "கள்ளவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் களித்திசை பாடும் குயிலே" என்றும், போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண் 1 ன் காமரங்கேட்டு உன் காதலியோடுடன் வாழ்குயிலே' என்றும், "மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்துார்” என்றும், "தேங்கனிமாம் .ெ மில் செந்தளிர் கோதும் சிறுகுயிலே’ என்றும்,