பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 53

கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் நெடுந்தேர் ஊருநர், கடுங்கண் மறவர் இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும் பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும்” என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

பூம்புகார் நகரம் இருபிரிவுகளாகக் காப்பியத்தில் விவரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பல வேறு கைத்தொழில்கள் நிறைந்ததும் வாணிபம் நிறைந்ததுமாக, வளமும் செல்வமும் நிறைந்த மக்கள் குவிந்துள்ள நகரமாக அதைக் காண்கிறோம்.

மேட்டுக்குடி மக்களும் கலையும் இசையும் கூத்தும் நிறைந்து மகிழ்ச்சியுடன் வாழும் மக்களை அங்கு காண்கிறோம்.

இந்திய சமுதாய வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தை இக்காட்சி காட்டுகிறது. நால்வகைப் படைகளைக்கொண்ட ஒரு வலுவான அரசு அமைந்துள்ளது. அவ்வரசு செங்கோல் அர சாகவும், மக்கள் பாராட்டும் அரசாகவும் அமைந்துள்ளது. வீதிகளில் அரச வீதிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் வணிகர் விதியும், மூன்றாவதாக அந்தனர் வீதியும், நான்காவதாக வீழ்குடி உழவர் வீதியும் இடம் பெற்றிருக்கிறது.

அந்தணர், அரசர், வைசியுர், சூத்திரர் என்னும் முந்திய கால வரிசை இங்கு மாறி வந்துள்ளது. மனுநீதியில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வர்ணப் பிரிவுகளின் வரிசை லெப்பதிகாரத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. இதை ஒரு முக்கியமான சமுதாய மாற்றமாக எடுத்துக்கொள்ளலாம்.

"குணத்தாலும் செய்கையாலும் நான்கு வர்ணங்களைப் படைத்தேன்’ என்பது கீதையின் வாக்கு மனுவுக்குப் பின்னர், பிறப்பால் வர்ணப் பிரிவினைகள் ஏற்படுகின்றன. சமுதாயத்தின் தலைமை யாருக்கு என்பதில் பிராமணர் களுக்கும் சத்திரியர்களுக்குமிடையில் வடக்கில் கடும்போர் நடந்திருக்கிறது. அதற்குப் ரகராமனுக்கும் பல அரசர்