பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 63

அாண் என்பதையும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இத்தகைய வலுவான அரண்கள் மனித முயற்சியால் ப ருவாக்கப்படுவனவாகும்.

ஒரு நாட்டின் பாதுகாப்பில் வெளிநாட்டுப் ப ையெடுப்புகளிலிருந்து பாதுகாப்புடன் உள்நாட்டுப் பாதுகாப்பும் ஒரு முக்கியமான அங்கமாகும். உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது, மக்களைச் சமூக விரோதக் குற்றவாளிகளின் தாக்குதல்களிலிருந்து காப்பதாகும்.

மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்விற்கும் மேம்பாட் டி ற்கும் இத்தகைய பாதுகாப்பும் அமைதியும் அவசிய பனவையாகும் சமூக விரோதக் குற்றங்களில் முக்கிய இடம் பெறுவன களவு, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, அபகரித்தல் முதலியவைகளாகும். களவு என்பதில் பொதுச் பெத்துகளைக் களவாடுவதும், தனியார் உடைமைகளைக் களவாடுவதும் சேருகின்றன.

மனிதனுடைய உழைப்பால், முயற்சியால் பொருளுற் பத்தியும் சொத்துகளும் என்று ஏற்பட்டனவோ அன்றுமுதல் அவைகளைத் தவறான, தீய வழிகளில் அபகரிப்பதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. செல்வமும் சொத்துகளும் உருவானபோது, அவற்றைத் திருடுவது, களவாடுவது, கொள்ளையடிப்பது, அபகரிப்பது முதலிய செயல்களும் நிகழத் தொடங்கியிருப்பதை வரலாற்றில் காண்கிறோம். இவைபற்றியெல்லாம் நமது அரசியல் அறிவியல் இலக்கியங்களிலும் சாத்திரங்களிலும் விரிவாகக் காண்கிறோம்.

குற்றவியல், தண்டனை இயல், விசாரணை, சாட்சியம், ஆதாரங்கள் முதலியவைபற்றியெல்லாம், தொடர்ச்சியாக, அ பியல் துறையில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு, பல சட் ங்களும் நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் சில முக்கிய கருத்துகளையும், உளவியல் நுணுக்கங்களையும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.