பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 95

பொய்யான தவ வேடத்தில் மறைந்துகொண்டு தீய ஒழுக்கங்களில் ஈடுபடும் போலி வேடதாரிகள், மறைவாகத் தீய வழிகளிலும் தவறான ஒழுக்கங்களிலும் ஈடுபடும் மகளிர், அரசனுக்குத் தீங்கு செய்யும் அமைச்சர், பிறன் மனை நயப்போர், பொய்ச்சாட்சி சொல்பவர்கள், புறங்கூறி மற்றவர்களுக்குக் கேடு செய்வோர் ஆகியோர் தனது பாசக்கயிற்றில் அகப்படுவாராயின் அவர்களைப் பற்றி இழுத்து, நிலத்தில் அறைந்து விழுங்கும் பூதமாக நிற்கும் "பூதச் சதுக்க மன்றம்" ஒன்றும் அப்புகார் நகரில் இருந்தது.

" அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் பாவை நின்றமூஉம் பாவை மன்றமும்” அரசனது செங்கோல் ஆட்சியில் சிறிது மாறுபாடு ஏற்பட்டாலும், அறம் கூறும் அவைகளில் நீதிநூல்களுக்கு மாறாக ஒருசிறிது கோனினாலும் நாவால் ஒன்றும் கூறாது துன்பக் கண்ணிர்விட்டு அழும் பாவை நிற்கும் பாவை மன்றம் ஒன்றும் புகார் நகரில் இருந்தது என்று சிலப்பதிகாரக் காப்பியம் குறிப்பிடுகிறது.

இப்பகுதியில் அக்காலத்தின் அரசியல், சமூகவியல், குற்றவியல், தண்டனைவியல், சமூகப் பாதுகாப்பு முதலியவை பற்றிய கருத்துகள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். நீதி தவறாமல் அரசுக்கு இருக்க வேண்டிய குறிப்புகளையும் அதில் காணலாம்.

இந்த மன்றங்களின் அமைப்புகள் மக்களை ஒழுக்க நெறியில் இருக்கச் செய்யவும், குற்றங்களுக்குரிய தண்டனை பற்றியும், ஊனமுற்றோருக்கு உதவியும் பாதுகாப்பும் கொடுப்பதுபற்றியும், ஆட்சி முறையும் அரசும் நீதி தவறாமல் செங்கோல் சாயாமல் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதை நிலை நாட்டவும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளாகும். இவற்றைப்பற்றி இலக்கிய நுட்பத்துடன் இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம்.

சமன ஆகம நெறிகளைப்பற்றி இளங்கோவடிகள் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். கோவலனும்