பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 89 ஊழுண்மையைத் தெரிந்துகொள்ள இயலாது. ஆகவே இளங்கோவடிகள் ஊழுண்மையைக் கூறுவதாக இருக்கின்றதேயன்றி நிலைநாட்டியதாக இல்லை. ஆயினும் அவர் ஊழுண்மைபற்றிக் கூறுவது யாது என்று பார்ப்போம். சிலப்பதிகாரக் கதையில் பல நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்ருக எடுத்துத் தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் ஊ ழ் வி னே யே காரணம் என்று கட்ட அவர் விரும்பவில்லை. நடந்த நிகழ்ச்சிகளுள் எது நடுநாயகமாக நிற்கின்றதோ, எந்த நிகழ்ச்சியின் காரணமாகக் கண்ணகியின் கற்பின் திறத்தை யும், அரசதர்மம் தவறின் அறங்கூற்ருவதையும் காட்ட விரும்புகின் ருரோ அந்த நிகழ்ச்சிக்குமட்டுமே ஊழ்வினை. யைக் காரணமாகக் காட்டுகின்ருர். அத்தகைய முக்கியமான, உயிர்நாடியான நிகழ்ச்சி யாது ? அது கோவலன் கொலேயுண்டதே. கோவலன் கொலையுண்ணுதிருந்தால் அவன் தன்னுடைய மனேவியின் சிலம்பை விற்று அப்பணத்தைக்கொண்டு வாணிகம் செய்திருப்பான். பொருள் மிக ஈட்டிக் கண்ணகியுடன் சந்தோஷ மாக வாழ்ந்திருப்பான். ஆல்ை அப்போது கண்ணகியைப்பற்றியும் அவளுடைய கற்பின் திறத்தைப்பற்றியும் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவந்திருக்காது. இளங்கோவடிகள் சிலப்பதிகார காவியத்தை இயற்றியிருக்கவுமாட்டார். கோவலன் கொலேயுண்டதனுல்தான் கண்ணகி அரசனிடம் சென்று வழக்குரைத்தாள், மதுரையை எரித்தாள், இறுதியில் விண்ணுலகு சென்ருள். இந்தக் காரியங்கள் நடைபெற்றதினுல்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகார காவியத்தைச் செய்து கண்ணகி கற்பு, ஊழ்வினே, அரசதர்மம் மூன்றையும் கூறினர். | கோவலன் கொலேயுண்டதற்குக் காரணம் ஊழ்வினேயே என்று இளங்கோவடிகள் கூறுகின்றர். அந்த ஊழ்வினை. யாது ?