பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சிலப்பதிகாரம்


-

அதுமட்டுமன்று. இந்தப் பிற ப் பி ல் கோவலனைப் பொற்கொல்லன் கொலையுண்ணச் செய்தான். அதற்குக் கா ர ண ம் பொற்கொல்லனேக் (சங்கமன) கோவலன் (பரதன்) கொன்றதாகும் ஊழ்வினைக் கொள்கையின் படி. அப்படியால்ை பரதன் சங்கமனேக் கொல்லக் காரணம் அதற்கு முந்திய பிறப்பில் சங்கமன் பரதனைக் கொன்றது என்று கூறவேண்டும். இவ்வாறு கூறிக்கொண்டேபோனுல் இதற்கு முடிவே கிடையாது. என்றேனும் ஒரு பிறப்பில் ஒருவன் மற்ருெருவனே ஊழ்வினை காரணமாகயில்லாமலே கொன்றிருக்கவேண்டும். அதுமுதலே ஊழ்வினை என்பது தொடங்கிருக்க வேண்டும். இவ்வாறு காரணம் கூறுவதால் எவ்வித பயனுமில்லை என்பது தெளிவாகும். கோவலன் கொலேயுண்டதற்கு முந்திய பிறப்பில் அவன் செய்த தீவினை காரணமாவதுபோல் அரசன் செய்த தீவினை யும் காரணமாகும் என்று இளங்கோடிகள் கூறுகின்ருர். அரசன் அறநெறி பி ற ழ் ந் து நடந்ததனுல்தானே கோவலன் கொல்லப்பட்டான். அரசன் உயிர் துறந்தான். அவ்வாறு அரசன் இறப்பதற்கு ஊழ்வினை காரணம், ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ளைன்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண, உரை சான் மதுரையோடு அரசு கேடு உறுமேனும் உரையு முண்டே ஆடி மாதம் தேய்பிறையில் அட்டமியும் கார்த்திகையும் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில் அரசனும் அழிவான், ஊரும் எரியும் என்று முன்னலேயே சோதிடர்கள் கூறியுளர் என்று மதுரை நகரத்தின் தேவதை கண்ணகியிடம் கூறியது. அதாவது கோவலன் மேற்கூறிய நாளில் கொ8லயுண். டால், அதே நாளில் அரசனும் இறப்பான் என்பது அவ. னுடைய ஊழ்வினே. அதேைலயே அவன் நீதி தவறிக்