பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பெற்றதாயும் பிறந்த பொன் டுைம் கற்றவ வானினும் நளிைசிறந்தனவே என்னுங் கொள்கையுடையவர்கள். அவர்கள் தாயார் பெயர் சொர்ணம்மாள் என்பதுபோலவே என் தாயார் பெயரும் சொர்ணம்மாள் என்பதே யாகும். சேதுப்பிள்ளே அவர்கள் என்னிடம் பேரன் புடைய. வர்கள். நான் சென்னைப் பல்கலைக்கழகக் கட்டிடத்தில் பதினைந்து ஆண்டுகளாகக் கலைக்களஞ்சியப் பணிசெய்து வந்த காலத்தில் அடிக்கடி தலைக்கூடி அளவளாவும் இன்பத்தை எனக்கு அள்ளித் தந்தார்கள். அவர்களுடைய புலமையில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட இல்லாதவனுயினும் அவர்களுடன் பேசும்போதெல்லாம் தவலரும் தொல் கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முட் குழிஇ நகலின் இனிதாயிற் காண்பாம் - அகல் வானத்து உம்பர் உறைவார் பதி ’’ என்னும் நாலடிச்செய்யுளே என் உள்ளத்தில் நிறைந்து நிற்கும். இத்தகைய அன்பர் அவர்கள் தம்முடைய அன்னேயார் பெயரால் அமைத்த சொற்பொழிவுகளே ஆற்றுமாறு அழைத்து எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் ஒருங்கே உதவுகின்ற அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தார்க்கு நான் மீண்டும் நன்றிகூற விரும்புகின்றேன். நான் இதற்குமுன் ஒருதடவை இந்தப் பல்கலைக் கழகத்தில்வந்து பேசும் பாக்கியம் பெற்றிருந்தேன். தமிழ் மாணவர் சங்கத்தார் அழைத்தார்கள்; சர்க்கரைப்புலவர் அவர்கள் தலைமை தாங்கினர்கள்; கா. சுப்பிரமணிய பிள்ளே அவர்கள் என்னை அவையோர்க்கு அறிமுகம்செய்து வைத்தார்கள்; சேதுப்பிள்ளை அவர்கள் நன்றி கூறினர்கள்; அந்த அனுபவத்தை எண்ணுந்தோறும் என் இதயத்தில் அது என்றும் வற்ருத இன்ப வூற்றக இருந்துகொண்டிருக் கின்றது.