பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சிலப்பதிகாரம் -- - - இல்லையோ, இருந்தால் இந்த அநியாயம் நடந்திராது என்று அழுது குமுறுகிருள். கற்புடை மகளிர் என்று இரண்டு சொற்களில் கூருமல் பெண்டிரு முண்டுகொல், பெண்டிரு முண்டுகொல் கொண்ட தொழுநர் உறுகுறை தாங்குறு உம் பெண்டிரு முண்டுகொல், பெண்டிரு முண்டுகொல் என்று கற்புடைமையின் சாரத்தைக் கூறுகின் ருர். கணவன் செய்யும் துன்பங்களைத் தாங்குபவரே கற்புடைப்பெண்டிர், கணவன் செய்யும் துன்பங்களுள் பெண்ணுக்கு மிகக் கொடியதாயிருப்பது அவனுடைய பரத்தமையே. இனிக் கண்ணகியின் கற்பின் திறத்தைப் பார்ப்போம். அவளுடைய கற்பை ஆறிய கற்பு’ என்றும் சீறிய கற்பு’ என்றும் இரண்டுவகையாகப் பிரித்துக் கூறுவர். கணவன் தனக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு ஆறியிருப்பது ஆறிய கற்பொழுக்கம். கணவனுக்குப் பிறரால் நேரும் துன்பங்களைப் பொறுக்க முடியாமல் சிறி எழுவது சீறிய கற்பொழுக்கம். கண்ணகியின் ஆறிய கற்பொழுக்கம் காவிரிப்பூம்பட்டினத்தும், சீறிய கற்பெழுக்கம் மதுரைமா நகரத்தும் நடைபெறுகின்றன. ஆதலால் அவற்றைத் தனித்தனியே ஆராய விரும்புகின்றேன். கண்ணகியின் ஆறிய கற்பு எத்தகையது? கோவலன் கண்ணகியை மணந்து சில ஆண்டுகள் அவளுடன் சேர்ந்து இல்லறம் நடத்துகின்றன். அதன்பின் மாதவி என்னும் பரத்தையிடம் சென்று அவளைத் தன் காதற்பரத்தையாக ஆக்கிக்கொள்கின்றன். அவளுடனேயே தங்கிவிடுகிருன். பண்டைக்காலத்தில் தலைவன் காதற்பரத்தையை வைத்துக்கொள்வதுண்டு. ஆல்ை அவளுடனேயே தங்கிவிடுவதில்லை. தலைவன் தலைவியின் பூப்புத்தோன்றிய மூன்றுநாளும் கூட்டமின்றி அணுகியிருந்து, அதன் பின்னர்ப் பன்னிரண்டு நாளும் அவளுடன் கூடியுறைவன்