பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சிலப்பதிகாரம் --- - -- இல்லற தர்மத்தை இழக்கச் செய்கின்றீர், நெறியின் நீங்கியோர் நீர்மை யராயுள்ளிர் என்றுகூடக் கூறவில்லை, நகுதற் பொருட்டன்று கட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு ' என்னும் அறத்தை மறந்தாள். கணவன் சொற்படி நடத்தல் கடமை என்று கற்பித்திருந்தபடியால், க ன வ ன் தவறுசெய்தால் அப்போது அவன் சொற்படி நடவாதிருத்தலே அவள் அவனுக்குச் செய்யும் அன்பும் நன்மையும் என்பதை அறியாதிருந்தாள். தனயன் அறநெறி தவறி நடந்தால் தந்தை அவனுக்கு உதவி செய்யாதிருந்தால் தனயனுக்குச் சாவு ஏற்படலாம் என்று ஏற்படினும் உதவி செய்யாதிருத்தலே கடன் என்று மகாத்மா காந்தியடிகள் கூறுவதே உண்மை (யங் இந்தியா 25-8-1920). இவ்வாறு தந்தை தனயனிடம் நடப்பது போலவே மனைவியும் கணவன் செய்யும் ஒழுக்கத் தவறுகளுக்கு உதவி செய்யலாகாது எ ன் று ம் காந்தியடிகள் கூறுகின்ருர் (ஹரிஜன் 21-10-1926). 驅 ஆதலால் கணவன் பரத்தைமையைத் தடுக்க எவ்வித முயற்சியும் செய்யாதவளும் பரத்தைமைக்காக நகைகள் கேட்டபோதெல்லாம் கழற்றிக் கொடுத்து வந்தவளுமான கண்ணகியின் கற்பு எக்காலத்திலும் ஏற்றமுடையதன்று. அவ8ளப் பெண்கள் பின்பற்றுதல் தவறேயாகும். பெண்கள் ஆண்களுடன் சம அந்தஸ்தும் உரிமையும் உடையவர்கள். இந்த உண்மையைப் பண்டைத் தமிழ் ஆசிரியர்களுள் அறநெறிச்சாரம் இயற்றிய முனைப்பாடியார் என்பவரே உரைக்கின்ருர். மருவிய காதல் மனேயாளும் தானும் இருவரும் பூண்டுய்ப்பி னல்லால் - ஒருவரால் இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம் செல்லாது தெற்றிற்று கின்று