பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சிலப்பதிகாரம் கோயில் சென்ருள். கள்வன் அல்லன் என்று மெய்ப்பித்தாள். கனவனின் நன்மதிப்பைக் காப்பாற்றினுள். இவ்வாறு அவளிடம் காணப்படும் சீரிய கற்பு எந்தக் காலத்திலும் எல்லாப் பெண்களிடமும் இன்றியமையாது அமையவேண்டிய சீரிய பண்பாடு என்பதில் சந்தேகமில்லை. கணவன் பெயருக்கு இழுக்கு ஏற்படும்போது மனேவி வாளா இருத்தல் ஆகாது. இயன்றவாறு அதைத் துடைக்க முயலுதல் கடன் என்பது கண்ணகியிடம் கற்றுக்கொள்ளவேண்டிய சிறந்த படிப்பினேயாகும். இந்த ஒரு விஷயத்திலேயே கண்ணகி கற்புக்கோர் எடுத்துக்காட்டாக எண்னத்தக்காள். கண்ணகி கணவனுக்கு ஏற்பட்ட இழுக்கை நீக்க முற்பட்டது சிறந்த பண்பு என்றேன். ஆயினும் அவள் கோவலனேக் கள்வன் என்று சொன்னதைப் பொறுக்க முடியாதவள், பரத்தன் என்று சொன்னதை எ வ் வா று பொறுத்தாள் என்பது விளங்கவில்லை கோவலன் மாதவியைக் காதற்பரத்தையாகக் கொண்டதே இழிசெயல். அதனுடன் நிற்காமல் வறுமொழியாளரொடும் வம்பப் பரத்தரொடும் திரிந்தான். வம்பப்பரத்தர் என்பதற்குப் புதிய காமநுகர்ச்சியை விரும்பும் காமுகர் என்று அடியார்க்குநல்லார் உரை கூறுவர். ஆகவே கோவலன் அவர்களுடன் சேர்ந்து புதுப்புதுப் பர்த்தையரைத் தேடி அலைந்தான் என்பது போதரும்,

  • முற்பகல் தலைக்கூடி நண்பகல் அவள் நீத்துப்

பிற்பகல் பிறர்த்தேரும் நெஞ்சம் (கலி 74) உடையவன் என்று கூறினுல் மிகையாகாது, காவிரிப்பூம் பட்டினத்தில் தென்றலானது வண்டுகளுடனும் வேனிலுடனும் விசிற்று என்று கூறுவதற்கு, இளங்கோவடிகள் குரல்வாய்ப் பான ரொடும் நகரப் பரத்தரொடும் இரிதரு மரபிற் கோவலன் போல