பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் == இளங்கோவடிகள் சோழநாட்டின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினத்தையும் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையையும் விரிவாக வர்ணிக்கின்ருர். அவர் தரும் வருணனையிலிருந்து அக்காலத்து மக்கள் எவ்வாறு வாழ்ந். தார்கள் என்று அறிந்துகொள்ளலாம். அவர்கள் செல்வத்தில் செழித்திருந்தார்கள். செல்வம் தேடுவதற்குரிய பயிர் செய்தல், கைத்தொழில், வாணிகம் ஆகிய மூன்று வழிகளே. யும் நன்கு நடத்தி வந்தனர். சோழநாடும் பாண்டிய நாடும் நிலவளம் நீர்வளம் இரண்டும் நிரம்பியனவாக இருந்தன. சோழநாட்டைக் காவிரி நதியும், பாண்டிய நாட்டை வைகை நதியும் வளப்படுத்தின, உழவ ரோதை மதகோதை உடை ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி என்றும், வாழி யவன்தன் வளநாடு மகவாய் வளர்க்குங் தாயாகி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி என்றும் இளங்கோவடிகள் காவிரி ஆற்றைச் சிறப்பிக்கின். ருா. உலகத்தில் கோள்நில திரிந்து மாரி வறங்கூருங் காலத்திலும் காவிரிப்புதுநீர்