பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சிலப்பதிகாரம் அதாவது பதினெண்வகைத் தானியங்களே மலேபோல் குவித்து வைத்துக்கொண்டு பறையாலும் மரக்காலாலும் அளந்து கொடுக்கும் தான்யக் கடைகள் நிறைந்திருந்தன. அக்காலத்து மக்கள் பயிர்த்தொழிலில் மிகுந்த திறமையுடையவர்களாயிருந்ததுபோலவே, பலவிதமான கைத்தொழில்களிலும் சிறந்தவர்களாயிருந்தார்கள். சோழ நாட்டில் இன்ப வாழ்வுக்கு வேண்டிய எல்லாக் கைத்தொழில் களும் நடைபெற்றன. அவற்றுள் தலையாயது நெசவுத் தொழில். காவிரிப்பூம்பட்டினத்தில் பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண்வினேக் காருகர் ’ இருந்தனர். காருகர் என்பது நெசவு செய்வோரையும் குறிக்கும், நெய்த துணியில் நூலால் பூவேலை செய்வோரையும் குறிக்கும். மாதவி கோவலனுடைய ஊடலைத் தீர்ப்ப தற்காகக் கோலங்கொண்டபோது நிறங்கிளர் பூந்துகில் ' உடுத்தினுள், நிறங்கிளர் பூந்துகில் என்பதற்கு நீலநிறங் கிளரும் பூத்தொழிலையுடைய நீலச்சாதருடை என்று அடியார்க்குநல்லார் உரை எழுதுகின் ருர். பாண்டிய நாட்டிலும் நெசவுத்தொழில் உயர்ந்த நிலை யிலேயே இருந்தது. அங்குள்ள ஜவுளிக்கடைகளில் நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னுாறு அடுக்கத்து கறுமடி நிறைந்திருந்தன. அறுவைக்கடையில் ஆடைகள் அடுக்கி வைத்திருந்ததில் இக்காலத்தில் காணப்படாத ஒரு சிறப்பும் உண்டு. இக்காலத்தில் க ைட யி ல் கோடித் துணிகளே வாங்கினுல் பெரும்பாலானவற்றை அப்படியே உடுத்த முடியாது. அவை கஞ்சிநாறும், நன்ருக அலசி உலர்த்திய பின்னரே உடுத்தலாம். ஆளுல் அக்காலத்தில் புடவைக் கடைகளுக்கு வாசம் கொளுத்துவதுண்டு, அதல்ை அங்குள்ள ஆடைகளே நறுமடி என்று கூறுகிருர்,