பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 47 அதாவது உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் ஒருங்குகூடி வந்தாலும் அவர்களுக்கு உணவு அளிக்கக்கூடிய வளமுடையதாகி இருந்தது. இவ்வாறு சிலப்பதிகார காலத்து மக்கள் செல்வத்தில் திஅளத்தபடியால் அவர்களுடைய வாழ்வும் அதற்குத் தகுந்த தாக இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரை மாநகரத்திலும் தெருக்கள் எல்லாம் ஆறு கிடந்தனபோல் அகன்று நீண்டிருந்தன, அங்குள்ள மாளிகைகள் முகில்தோய் மாடங்கள், ஒவ்வொன்றும் ஏழு மாடிகள் உடையது. மாதவிபோன்ற த2லக்கோல் வரிசை பெற்ற ஆடுங்கூத்திகளுடைய வீடுகள் அரசன் தன் பரிவாரங்களுடன் தங்கக்கூடிய அளவு பெரியனவாக இருந்தன. வீடுகளின் முகப்பிலுள்ள திண்ணே களே இளங்கோவடிகள் மரகத மணியொடு வயிரம் குயிற்றிப் பவளத் திரள் காற் பைம்பொன் வேதிகை என்பர். விட்டு வாயில்கள் மிக உயரமாயிருக்கும், அவற்றில் மகர தோரணங்கள் தொங்கும். குளிர்காலத்தில் வாடைக்காற்று வீசி உடலை நடுங்கச் செய்யும். ஆதலால் அக்காலத்தில் நாலாவது மாடியில் தங்குவர். அங்குள்ள சன்னல்கள் குறுங்கண் சாளரங்கள். அதிகக் குளிராய் இருந்தால் அந்தச் சிறு சன்னல்களையும் மூடிவிட்டு அகில எரித்து நெருப்புக் காய்வர். இதர காலங்களில் குளிர்ந்த தென்றற்காற்று மெல்லென்று தாராளமாக வருவதற்காக மற்ற மா டி க ளி ல் சன்னல்கள் வாய்களாகவும் (அதாவது பெரிய வாயில்கள் போலவும்), புழைகளாகவும் (அதாவது சிறிய வாயில்கள் போலவும்) இருக்கும் (பட்டின 151-287). சன்னல்களும் மாலேத் தாமத்து மணிநிறைத்து வகுத்த கோலச் சாளரங்கள்