பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 59 பயன்படும் அழகியசொல் சான்ருேன் என்பது. சான்றேன் என்பவன் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையுடையவன். கம்பர் கூறும் நிறைகுணத்தன். ஆல்ை சான்ருேன் என்னும் சொல்லப் புலவர்கள் போர்வீரனக் குறிக்கவும் பயன்படுத்தலாயினர். போர்வீரன் என்பவன் போர்க்களம் சென்று புறங்கொடாமல் உயிர் போகும்வரைப் போர்புரி. பவன். அவனிடம் அந்த ஒரு குணமிருந்தால் போதும், மற்றப்படி அவன் எத்துணை இழிந்தவனுயினும் பாதகமில்லை, அவன் போர்வீரனே. அத்தகையவனேப் புலவர்கள் சான்ருேன் என்று கூறியது அணுவளவும் பொருத்தமில்லை. ஆளுல் அந்தச் சொல்லின் துர்அதிர்ஷ்டம் அது. அந்த துர் அதிர்ஷ்டம் நம்பி என்ற சொல்லுக்கும் இளங்கோவடிகள் காலத்தில் உண்டாயிற்று. நம்பி என்பது ஆடவரில் தலையாயவனைக் குறிக்கும். ஆல்ை இளங்கோவடிகள் அதைப் பரத்தனேக் குறிக்கவே தாம் ஆளும் இரண்டு இடத்திலும் (சிலப். 3: 168; 14:100) பயன்படுத்துகின்ருர். அவர் காலத்தில் பரத்தரே ஆடவரிற் சிறந்தவராகக் கருதப்பட்டனர்போலும். காவிரிப்பூம்பட்டினத்தில் பெண்களின் தசையை விலை பேசும் தெரு ஒன்று இருந்தது என்பதும், அங்கு பரத்தராகிய நம்பியர் வந்து கொள்முதல் செய்வர் என்பதும் அக்காலத்து மக்களின் வாழ்வில் காமம் எத்துணை உயர்நிலை பெற்றிருந்தது என்பதைக் காட்டும். காவிரிப்பூம்பட்டினத்தில் மருதுார்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு பகுதிகள் இருந்தன. அவற்றுள் மருதுார்ப்பாக்கத்திலும் பட்டினப்பாக்கமே சிறந்தது என்பது இளங்கோவடிகள் கருத்து. அதற்குக் காரணம் பீடுகெழி சிறப்பின் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கம் அதாவது பட்டினப்பாக்கம் பெருமையையுடைய பெரி யோரை மிகுதியாயுடையது, புலவர்களால் பாடப்பெறும் சிறப்புடையது என்று கூறுவர்.