பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 73 கொள்ளலாம். அப்பேச்சுக்களும் செயல்களும் இக்காலத்தில் பேசவோ எழுதவோ முடியாத அளவு அருவருக்கத்தக்க ஆபாசமாகவுள்ளன. அத்துணை அலங்கோலமாயிருந்தது அக்காலத்து நாகரிகம் ! காமுகரும் கடைகழி மகளிரும் வையை ஆற்றங்கரையில் மதுவுண்டு களிப்பர், களியால் குளிப்பர், குளித்துக் காம மிகுதியால் கலப்பர், கலந்து அதற்கு இன்பமுண்டாகப் புலப்பர், ஆதலால் ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்தகாமம் வாடற்க வையை தினக்கு வையாய் ! நின்கட் புனலாடுவார் நெஞ்சத்து மிகுந்த காமத்தை உண்டாக்கும் இத்தகைய நினக்கு எஞ்ஞான்றும் குறையாதொழி.க என்று மருத்துவன் நல்லச்சு தர்ை (பரி. 6). வையை நதிக்குக் கூறும் வாழ்த்து போதும், அக்காலத்து நாகரிகத்தை அங்கை நெல்லிக்கனியென அறிவுறுத்தற்கு. இதல்ைதான்போலும் அறிஞர்கள் பரிபாடலை ஓங்கு பரிபாடல் என்று ஏத்துகின்றனர் ! ஆங்கில இலக்கியங்களுள் தலைசிறந்தவை ஷேக்ஸ்பியர் நாடகங்கள். இவை இருந்தால்போதும், இந்தியா போயினும் பாதகமில்லை என்று பேரறிஞர் கார்லேல் கூறினர். ஆல்ை அவற்றில் ஆபாசமான பகுதிகள் இருப்பதால் அவற்றை நீக்கியே படித்தல் வேண்டும் என்று வற்புறுத்துவதற்காக பிரிட்ஜெஸ் என்னும் ஆங்கில மகாகவி ஒரு தனி நூல் எழுதியுளர். அதுபோல் நாமும் வையைப் பாடல்களை நீக்கிவிட்டு மற்றப் பாடல்களைப் பயிலுதலே நலம். இது நிற்க, நண்பகலில் இவர்கள் முல்லே குவளே நெய்தல் ஆகிய மலர்களைக் கொண்டையிலே செருகுவர். கழுத்தில் முத்து வடத்துடன் மல்லிகையும் செங்கழுநீரும் சேர்த்துக் கட்டிய மாலையை அணிவர். சந்தனக்குழம்பை மேனி முழுவதும் மட்டிப்பர். இந்த அலங்காரங்களுடன் தங்கள் காதல்