பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 7) இக்கருத்தைக் கொண்டே பிற்காலத்திருந்த குமரகுருபர சுவாமிகளும், துறவிகள் பண்ணுெடு பாடல் செவிமடார் . என்று கூறுகின் ருர். இதுதான் பண்டைத்தமிழ் மக்கள் கலைகளே வளர்த்த அழகு! அவர்கள் ஆடற்கலையையும் பாடற்கலையையும் வெறும் .ெ ப ா ழு து போக்காகவும் காமத்தை எழுப்புவதற்காகவுமே பயன்படுத்தினர். ஆன்ம வளர்ச்சியைப்பற்றி அவர்கள் சி றி து ம் சிந்தித்ததாகத் தெரியவில்லை. தமிழ்மன்னர்கள் ஆடன் மகளிரை விழைந்தனர் என்பது மட்டுமன்று. அதை அவர்களுடைய புகழ்ச் செயல்களுள் ஒன்ருகவே அக்காலத்துப் புலவர்கள் போற்றி. ஞர்கள். கோவூர்கிழார் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளி. யைப் பாடிய பாட்டு ஒன்று புறநானூறு என்னும் தொகைநூலில் உள்ளது. அதன் துறை இயன் மொழி என்று குறித்திருக்கின்றது. இயன்மொழி என்பது அரசனுடைய சிறப்பியல்புகளைப் புகழ்ந்து பாடுவதாகும். கோவூர்கிழார் அந்தப் பாட்டில் நலங்கிள்ளியின் இரண்டு சிறப்பான பண்புகளைப் பாடுகின்ருர். நலங்கிள்ளி தன்னிடம் வந்து பாடும் பாவ. லர்க்குப் பரிசாக வஞ்சிநகரைத் தருவன், தன்னிடம் வந்து ஆடும் விறலியர்க்கோ " ஒண்ணுதல் விறலியர் பூவிலே பெறுகென மாட மதுரையும் தருவன் பூவிலே என்பது ஆடற்கூத்தியின் உடலே ஒரு நாளேக்கு உபயோகிப்பதற்குக் கொடுக்கும் கூலி அல்லது விலையாகும், ஆகவே நலங்கிள்ளி பாணர்க்குத் தருவது பரிசில், விறலியர்க்குத் தருவது பரிசம். இக்காலத்தில் எந்தப் புலவரும் எந்த அரசனேயும்பற்றி இவ்வாறு பாடத் துணியமாட்டார், பாடிலுைம் எந்த அரசனும் அதைக் கேட்கச் சம்மதிக்கமாட்டான், எந்தப் புலவரும் அந்தப் பாடலே இறவாமற் பாதுகாக்க விரும்பமாட்டார், ஆளுல் கோஆர்.