பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலக் காதை 103

காதலி தண்னொடு கதிர்செல் வதண்முண், மாட மதுரை மாநகர் புகுக என, மாதவத்து ஆட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் தனக்குக் கூறுங் காலை - அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய 115 புறஞ்சிறைமூதுார்ப்பூங்கண் இயக்கிக்குப் - பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்

மாதரி சந்திப்பு ஆகாத்து ஓம்பி, ஆப்பயன் அளிக்கும் 120 கோவலர் வாழ்க்கை ஒர் கொடும்பாடு இல்லை; தீதிலள்; முதுமகள்; செவ்வியள்; அளியள்; மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம்இன்று; என எண்ணின ளாகி - 'மாதரி கேள், இம் மடந்தை-தன் கணவன் 125

தாதையைக் கேட்கிண், தண்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்துஎதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்; உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும் இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் 130 மங்கல மடந்தையை நன்னிர் ஆட்டிச், செங்கயல் நெடுங்கணி அஞ்சனம் தீட்டித், தேமென் கூந்தல் சிண்மலர் பெய்து; துTமடி உடீஇத், தொல்லோர் சிறப்பின் ஆயமும், காவலும், ஆய்இழை தனக்குத 135 தாயும் நீயே ஆகித் தாங்கு, ஈங்கு, எண்னொடு போந்த இளங்கொடி நங்கை - தன் வண்ணச் சீறடி மணமகள் அறிந்தலள்; கடுங்கதிர் வெம்மையில் காதலன்- தனக்கு நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித் 140