பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலைக்களக் காதை 143

'மந்திரம், தெய்வம், மருந்தே நிமித்தம். தந்திரம். இடனே, காலம், கருவி என்று எட்டுடண் அண்றே இழுக்குடை மரபிண் கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது; மருந்திற் பட்டீர் ஆயிண், யாவரும். j70 பெரும்பெயர் மண்னனின் பெருநவைப்பட்டீர்; மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயிண். இந்திர குமரரின் யாம்கான குவமோ? தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின், கையகத்து உறுபொருள் காட்டியும் பெயர்குவர். 175 மருந்தின் நங்கண் மயக்குவர் ஆயின், இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ ? நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும் புகற்கிலர், அரும்பொருள் வந்துகைப் புகுதினும், தந்திர-கரணம் எண்ணுவர் ஆயின், j${} இந்திரண் மார்பத்து ஆரமும் எய்துவர். இவ்விடம் இப்பொருள் கோடற்கு இடம்னனின். அவ்விடத்து அவரை யார்காணி கிற்பார்: காலங் கருதி அவர்பொருள் கையுறின், மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ ? 185 கருவி கொண்டு அவர் அரும்பொருள் கையுறின், இருநில மருங்கின் யார்காண் கிற்பார்? இரவே பகலே என்று இரண்டு இல்லை; கரவுஇடம் கேட்பின், ஒர் புகலிடம் இல்லை;

து தர் கோலத்து வாயிலின் இருந்து. | 90 மாதர் கோலத்து வல்லிருள் புக்கு, விளக்கு நிழலில் துளக்கிலண் சென்று, ஆங்கு இளங்கோ வேந்தண் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து, மின்னின் வாங்கத்