பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

வழக்குரை காதை

அரிமாண் ஏந்தியஅ மளிமிசை இருந்தனன்

திருவிழ் மார்பிண் தெண்னவர் கோவே. - இப்பால் !

செய்தி அறிவித்தல்

"வாயிலோயே! வாயிலோயே ; அறிவுஅறை போகிய பொறியறு நெஞ்சத்து, இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே! 25 'இணை அரிச் சிலம்பொன்று ஏந்திய கையள், கணவனை இழந்தாள், கடையகத் தாள்' என்று அறிவிப் பாயே! அறிவிப் பாயே! என - வாயிலோன், வாழி! எம் கொற்கை வேந்தே வாழி! தென்னம் பொருப்பின் தலைவ, வாழி! 30 பழியொடு படராப் பஞ்வ வாழி செழிய, வாழி! தெண்னவ வாழி! அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்; 35 அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு, சூர்உடைக் கானகம் உகந்த காளி, தாருகண் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்; செற்றனள் போலும், செயிாத்தனள் போலும், 40 பொற்றொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள், கணவனை இழந்தாள் கடைஅகத் தாளே, கணவனை இழந்தாள் கடைஅகத் தாளே' என -

அரச அவை 'வருக, மற்று அவள் தருக, ஈங்கு' எனவாயில் வந்து, கோயில் காட்டக் 45 கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி. 'நீர்வார் கண்ணை, எம்முன் வந்தோய்! யாரை யோ, நீ மடக்கொடி யோய்? என