பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சின மாலை 131

தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய், முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த ஆடகப்பூம் பாவை அவள்;-7

- போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்தபதிப் பிறந்தேன்; 35 பட்டாங்கு யானும் ஒர் பத்தினியே ஆமாகில் ஒட்டேண் அரசோடு ஒழிப்பேண் மதுரையும்! எண் பட்டிமையும் காண்குறுவாய் நீ' என்னா விட்டு அகலா -

எரியிடல் 'நான்மாடக் கூடண் மகளிரும் மைந்தரும், வானக் கடவுளரும், மாதவருங் கேட்டிமிண்; 40 யானமர் காதலன் தன்னைத் தவறுஇழைத்த கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யாண் என்று -

இடமுலை கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா, அலமந்து. மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து, 45 விட்டாள் எறிந்தாளர், விளங்கு இழையாள் -

- வட்டித்த நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து. மாலை எரியங்கி வானவன் தான் தோன்றி, 'மாபத்தினி! நின்னை மாணப்பிழைத்த நாள் 50 பாயெரி இந்தப் பதியூட்டப், பண்டேயோர் ஏவல் உடையேனால்; யார்பிழைப்பார், ஈங்கு? எண்ணிப்

'பார்ப்பார். அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத்