பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரை காதை

வான ஊர்தி ஏறினள் மாதோகானமர் புரிகுழற் கண்ணகி - தாண் - எண்.

வெண்பா தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து.

கட்டுரை முடிகெழு வேந்தர் மூவருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும், மறனும், ஆற்றலும், அவர்தம் பழவிறல் மூதுார்ப் பண்புமேம்படுதலும், விழவுமலி சிறப்பும், விண்ணவர் வரவும். ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக் குடியும், கூழின் பெருக்கமும், அவர் தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந்து ஊட்டலும், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும், ஆரபடி, சாத்துவதி என்றிரு விருத்தியும், நேரத் தோன்றும் வரியும், குரவையும், என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும், வடஆரியர் படைகடந்து: தெண் தமிழ்நாடு ஒருங்குகானப், புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று.

145

200

20