பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சிலப்பதிகாரம்

யாதொன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப் போதாடி வந்த புதுப்புனல்; போதாடி வந்த புதுப்புனல் மற்றையார் மீதாடின் நோம், தோழி! நெஞ்சன்றே. 6

உரைஇனி மாதராய் உண்கணி சிவப்பப் புரைதிர் புனல்குடைந் தாடினோ மாயிண் உரவுநீர் மாகொண்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொண்று பாடுகம்வா தோழி! 7

வேலவனைப் பாடுதல்

சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குண்றும், ஏரகமும் நீங்கா இறைவண்கை வேலன்றே பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே 8

அணிமுகங்கள் ஓர் ஆறும், ஈராறு கையும், இணையின்றித் தானுடையாண் ஏந்திய வேலன்றே - பிணிமுகமேற் கொண்டு அவுணர் பீடழியும் வண்ணம் மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே ! 9

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டாண் திருக்கைவே லண்றே - வருதிகிரி கோலவுணண் மார்பம் பிளந்து, குருகுபெயர்க் குன்றம் கொண்ற நெடுவேலே! 10

இறைவளை நல்லாய் ! இதுநகை யாகின்றே - கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள் மற்று அன்னை; அலர்கடம்பண் என்றே, வெறியாடல் தாண்விரும்பி, வேலண் வருக! என்றாள்! !!