பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சிலப்பதிகாரம்

மலை நாடனோடு உரைத்தது என்றியாம் பாட, மறைநின்று கேட்டருளி, மண்றலம் கண்ணி மலைநாடண் போவாண்முண் சென்றேன்; அவன்தண் திருவடி கைதொழுது நின்றேன்; உரைத்தது கேள், வாழி, தோழி!" 19 கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி, மடந்தை பொருட்டால் வருவது இவ்வூர்; அறுமுகம் இல்லை; அணிமயில் இல்லை; குறமகள் இல்லை; செறிதோள் இல்லை; கடம்பூண் தெய்வமாக நேரார், மடவர் மன்றஇச் சிறுகுடி யோரே! 20

பாட்டு மடை

பத்தினியைப் பாடுதல் என்று ஈங்கு, அலர்பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டுப், புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன மலர்தலை வெற்பண் வரைவானும் போலும் ! முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல் தலைவனை வானோர் தமராரும் கூடிப், பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலை ஒன்று பாடுதும் யாம். 21

பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்; பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்; கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத், திமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்; திமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால், மாமலை வெற்பண் மணவணி வேண்டுதுமே. 22