பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சிக் காதை 153

ஒலிகள் எழுந்தன குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும், வென்றிச் செவ்வேள் வேலண் பாணியும், 25 தினைக்குறு வள்ளையும், புனத்தெழு விளியும், நறவுக்கள்ை உடைத்த குறவர் ஒதையும் பறையிசை அருவிப் பயங்கெழும் ஒதையும், புலியொடு பொரூஉம் புகர்முக ஒதையும், கலிகெழு மீமிசைச் சேணோன் ஒதையும், 30 பயம்பில்வீழ் யானைப் பாகர் ஒதையும், இயங்குபடை அரவமொடு, யாங்கணும் ஒலிப்ப

காணிக்கை அளந்துகடை அறியா அருங்கலம் சுமந்து, வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது. 35 திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல - யானைவெண் கோடும், அகிலின் குப்பையும், மாண்மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும், சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும், அணி அரி தாரமும்; 40 ஏல வல்லியும், இருங்கறி வல்லியும், கூவை நூறும், கொழுங்கொடிக் கவலையும், தெங்கின் பழனும், தேமாங் கனியும், பைங்கொடிப் படலையும், பலவின் பழங்களும், காயமும், கரும்பும், பூமலி கொடியும் 45 கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும், பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்; ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்; வாள்வரிப் பறழும், மதகரிக் களபமும், குரங்கின் குட்டியும், குடாவடி உளியமும், 50 வரையாடு வருடையும், மடமான் மறியும்,