பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சிலப்பதிகாரம்

"உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும், செயிருடன் வந்தஇச் சேயிழை தன்னினும், நண்ணுதல்! வியக்கும் நலத்தோர் யார்?" என, மண்னவண் உரைப்ப -

கோப்பெருந்தேவி கூற்று 'காதலன் துன்பம் காணாது கழிந்த | 10 மாதரோ பெருந்திரு உறுக, வானகத்து அத்திறம் நிற்க, நம் அகல்நாடு அடைந்தஇப் பத்தினிக்கடவுளைப் பரசல் வேண்டும்' என - மாலை வெண்குடை மண்னவண் விரும்பி, நூல்அறி புலவரை நோக்க - 115

புலவர் கருத்து 'ஒற்கா மரபிற் பொதியில் அன்றியும், விற்றலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக் கற்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்; கங்கைப்பேர் யாற்றினும், காவிரிப் புனலினும், 120 தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து' என -

12. சேரமான் கூற்று பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு முதுநீர்க் காவிரி முன்துறைப் படுத்தல், மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉம் செய்கையோ அண்று; 125

புண்மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை; முந்துால் மார்பின், முத்திச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை அரசன் மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்