பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையறம் படுத்த காதை 45

குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது 60 உடனுறைவு மரீஇ ஒருவா ஆயின, நறுமலர்க் கோதைநிண் நலம்பா ராட்டுநர் மறுவில் மங்கல அணியே அன்றியும் பிறிதணி அணியப் பெற்றதை எவண்கொல்! பல்லிருங் கூந்தற் சிண்மலர் அண்றியும் 65 எல்அவிழ் மாலையொடு எண் உற் றனர்கொல்! நான நல்அகில்நறும்புகை அன்றியும், மாண்மதச் சாந்தொடு வந்ததை எவண்கொல்! திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அண்றியும், ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவண்கொல்! 70 திங்கள் முத்து அரும்பவும், சிறுகுஇடை வருந்தவும் இங்கு இவை அணிந்தனர் எண் உற் றனர்கொல்!

உருவகங்கள்

மாசுஅறு பொண்னே வலம்புரி முத்தே! காசுஅறு விரையே கரும்பே தேனே! அரும்பெறற் பாவாய்! ஆர் உயிர் மருந்த்ே! 75 பெருங்குடி வாணிகண் பெருமட மகளே! மலையிடைப் பிறவா மணியே எண்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே எண்கோ? யாழிடைப் பிறவா இசையே எண்கோ தாழ்இருங் கூந்தல் தையால் நின்னை" என்று 80 உலவாக் கட்டுரை பல பாராட்டித் தயங்குஇணர்க் கோதை தண்னொடு தருக்கி, வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்