பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சிலப்பதிகாரம்

மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் இறையோண் கேட்டாங்கு, இருந்த எல்லையுள்அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப், பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச், செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க, 14.5 அந்திச் செக்கர், வெண்பிறை தோன்றப் பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோண் செவ்வியற் கணியெழுந்து உரைப்போன் "எண்.நான்கு மதியம், வஞ்சி நீங்கியது; மண்ணாள் வேந்தே வாழ்க!' என்று ஏத்த- 150 நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதிர் கொடித்தேர் விதியுள், குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன உறையுள் முடுக்கர் ஒருதிறம் போகி, வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் 155 சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக் கோயில் இருக்கைக் கோமகன் ஏறி

சோழநாட்டு நிலைமை வாயி லாளரின் மாடலன் கூஉய், 'இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மண்னவண் கொற்றமொடு 160 செங்கோல் தன்மை தீதுஇன்றோ?' என 'எங்கோ வேந்தே, வாழ்க என்று ஏத்தி, மங்கல மறையோண் மாடலன் உரைக்கும்; வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன்று எறிந்த இகல்வேல் கொற்றமும்; 165 குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர, எறிதரு பருந்தின் இடும்பை நீங்க, அரிந்துஉடம்பு இட்டோன் அறந்தரு கோலும், திரிந்துவே றாகும் காலமும் உண்டோ? 'தீதோ இல்லை செல்லற் காலையும் 170 காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு' என்று;