பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176.3 சிலப்பதிகாரம்

நிதிதுஞ்சு வியன்நகர், நீடுநிலை நிவந்து 200 கதிர்செலவு ஒழித்த கனக மாளிகை, முத்துநிரைக் கொடித்தொடர் முழுவதும வளைஇய சித்திர விதானத்துச் செய்பூங் கைவினை, இலங்கொளி மணிநிரை இடையிடை வகுத்த விளங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய, 205 மடையமை செறிவின், வான்பொற் கட்டில், புடைதிரள் தமனியப் பொற்கால் அமளிமிசை; இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்து - ஆங்கு

வரவேற்பு எறிந்து களங் கொண்ட இயல்தேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோள்துணை துறந்த துயரிங்கு ஒழிக" எனப், பாட்டொடு தொடுத்துப் பல்லாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று. பெறுகநின் செவ்வி, பெருமகன் வந்தாண்; 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுக' எனஅமைவிளை தேறல் மாந்திய கானவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட, விங்குபுனம் உணி இய வேண்டி வந்த ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த; 220 வாகை, தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கு' எனத். திறத்திறம் பகர்ந்து, சேண்ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்'வடதிசை மன்னர் மண்ணெயில் முருக்கிக் 225 கவடி வித்திய கழுதைஏர் உழவன், குடவர் கோமாண் வந்தான்; நாளைப், படுநுகம் பூணாய், பகடே! மண்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி ஆம்' எனும்;