பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சிலப்பதிகாரம்

உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக் 120 கடும்புனல் கங்கைப் பேர்யாற்று, வெண்றோய், நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே! புரையோர் தம்மொடு பொருந்த உணர்ந்த அரைசர் ஏறே அமைக நிண்சீற்றம்! மண்ணாள் வேந்தே நின்வாழ் நாட்கள் 125 தண்ஆன் பொருநை மணலினும் சிறக்க! அகழ்கடன் ஞாலம் ஆள்வோய் வாழி! இகழாது எண்சொல் கேட்டல் வேண்டும். வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந்து இரட்டி சென்றதற் பின்னும், 130 அறக்கள வேள்வி செய்யாது, யாங்கணும் மறக்கள, வேள்வி செய்வோய் ஆயினை! வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின், கடற்கடம்பு எறிந்த காவலன் ஆயினும், 135 விடர்ச்சிலை பொறித்த விறலோன் ஆயினும், நான்மறை யாளன் செய்யுட் கொண்டு, மேல்நிலை உலகம் விடுத்தோன் ஆயினும், "போற்றி மன்னுயிர் முறையிற் கொள்க" எனக் கூற்றுவரை நிறுத்த கொற்றவன் ஆயினும், | 40 வண்சொல் யவனர் வளநாடு ஆண்டு, பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும், மிகப்பெரும் தானையோடு இருஞ்செரு வோட்டி அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,

உருகெழு மரபின் அயிரைமண்ணி, 145 இருகடல் நீரும் ஆடினோன் ஆயினும், சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து, மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும், மீ.க்கூற் றாளர் யாவரும் இண்மையின் - யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்! 150