பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

நாளைச் செய்குவம் அறம் எனின், இண்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்; இதுஎன வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகின் முழுவதும் இல்லை; வேள்விக் கிழத்தி இவளொடுங் கூடித், தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற, ஊழிய்ொடு ஊழி உலகங் காத்து, நீடுவா ழியரோ நெடுந்தகை!' என்று. மறையோண் மறைநா உழுது, வாண்பொருள் இறையோன் செவி செறுவாக வித்தலின்

கண்ணகியைப் பாராட்டுதல் வித்திய பெரும்பதம் விளைந்து, பதம் மிகுந்து துயத்தல் வேட்கையின், சூழ்கழல் வேந்தண் நான்மறை மரபின் நயந்தெரி நாவிண், கேள்வி முடித்த வேள்வி மாக்களை மாடல மறையோண் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி.

ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத், தாழ்நீர் வேலித் தண்மலர் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி, நண்பெரு வேள்வி முடித்ததன் பின்னாள்.

தம்பெரு நெடுநகர்ச் சார்வதும் சொல்லி, 'அம் மன்னவர்க்கு ஏற் பன செய்க, நீ" என, வில்லவண் கோதையை விருப்புடன் ஏவி, 'சிறையோர் கோட்டஞ் சீமின்; யாங்கணும், கறைகெழு நாடு கறைவீடு செய்மின் என, அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை முழங்குநீர் வேலி மூதூர் ஏவி.

180

185

190

195

200

205