பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடல் ஆசிரியன் இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து. பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப், பதினோர் ஆடலும். பாட்டும், கொட்டும், விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு ஆடலும் பாடலும் பாணியும், துளக்கும். கூடிய நெறியிற் கொளுத்தும் காலை பிண்டியும். பிணையலும், எழிற்கையும், தொழிற்கையும் கொண்ட வகைஅறிந்து, கூத்துவரு காலை கூடை செய்தகை வாரத்துக் களைதலும், வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும், பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும், ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும், குரவையும் வரியும் விரவல செலுத்தி, ஆடற்கு அமைந்த ஆசான் தண்னொடு

இசையோன்

யாழும், குழலும், சீரும், மிடறும், தாழ்.குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து, வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித் தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் தேசிகத் திருவின் ஓசை எல்லாம் - ஆசிண்று உணர்ந்த அறிவினண் ஆகிக் கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும், பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை வசைஅறு கேள்வி வகுத்தனண் விரிக்கும் அசையா மரபின் இசையோன் தானும்

4

7

20

25

30

35