பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சிலப்பதிகாரம்

முதிரா முலைப் பூசல்கேட்டு ஆங்கு, அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த இடைக்குல மகள் இடம் எய்தி, ஐயை அவள் மகளோடும் வையைஒரு வழிக்கொண்டும்; மாமலை மீமிசை ஏறிக், கோமகள்தண் கோயில் புக்கு; நங்கைக்குச் சிறப்பு:அயர்ந்த செங்குட்டுவற்குத் திறம் உரைப்பர்-மன்.

தேவந்தி அறிமுகம் முடிமன்னர் மூவரும் காத்துஒம்பும் தெய்வ வடபேர் இமய மலையிற் பிறந்து கடுவரல் கங்கைப் புனல்ஆடிப் போந்த தொடிவளைத் தோழிக்குத் தோழிநாண் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநாண் கண்டீர் ! 2

காவற்பெண்டு மடம்படு சாயலாள் மாதவி-தன்னைக் கடம்படாள் காதற் கணவண் கைப்பற்றிக் குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த தடம்பெருங் கண்ணிக்குத் தாயர் நாண் கண்டீர்! தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நாண் கண்டீர்! 3

அடித்தோழி அறிமுகம் தற்பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த ஏற்பயந் தாட்கும் எனக்குமோர் சொல்லில்லை; கற்புக் கடம்பூண்டு, காதலன் பின்போந்த பொற்றொடி நங்கைக்குத் தோழிநாண் கண்டீர்; பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநாண் கண்டீர்; 4