பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரந்தரு காதை 199

'மண்னர் கோவே, வாழ் கெண் றேத்தி, முந்நூல் மார்பன் முண்ணியது உரைப்போன்

'மறையோன் உற்ற வான்துயர் நீங்க, 120 உறைகவுள் வேழக் கையகம் புக்கு, வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலி-தண்மேற் காதலர் ஆதலின், மேல்நிலை உலகத்து அவருடன் போகும் தாவா நல்லறம் செய்திலர்; அதனால், 125 அஞ்செஞ் சாயல் அஞ்சாது அணுகும் வஞ்சி மூதூர் மாநகர் மருங்கில் பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின் அற்புளம் சிறந்தாங்கு அரட்டன் செட்டி மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின் 130 உடன்வயிற் றோராய் ஒருங்குடன் தோண்றினர்; ஆயர்முதுமகள் ஆயிழை தன்மேல்

போய பிறப்பிற் பொருந்திய காதலின், ஆடிய குரவையின், அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஆயினள் - 135

நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும், அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்; அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும் பிறந்தவர் இறத்தலும், இறத்தவர் பிறத்தலும்; புதுவ தன்றே; தொன்றியல் வாழ்க்கைஆண் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி, மாநிலம் விளக்கிய மண்னவண் ஆதலின், செய்தவப் பயண்களும், சிறந்தோர் படிவமும் கையகத் தனபோற் கண்டனை யன்றே! ஊழிதோறு ஊழி உலகங் காத்து,