பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகி 2O7

இவள் இல்வாழ்க்கையில் அறத்தைக் கடைப் பிடித்

தவள் என்பது அவள் கோவலனுக்குத் தரும் விடையில்

வெளிப்படுகிறது.

'அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை'

என்று தன் நிலைமையை எடுத்துக் கூறுகிறாள்.

அறவாழ்க்கை இழந்தமைக்குத்தான் அவள் வருந்தி இருக் கிறாள். இன்ப இழப்பைப் பற்றி அவள் எங்கும் எப்பொழுதும் பேசவே இல்லை. அவள் வாழ்க்கையின் பண்பு, அன்பும் அறமும் என்பதைச் சுட்டிகாட்டி வாழ்ந்தவள் என்பது தெரிகிறது.

வள்ளுவர் 'பெண்' அவள் நற்குண நற்செயல்களைத் தொகைப்படுத்திக் கூறுகிறார்.

'தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்விலாள் பெண்' என்பர்.

நாணமும் மடமும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக வாழ்ந்தமை அவள் தற்காத்தலுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். தன் துயர் காணாமல் அவனைப் பேணிக் காத்தமை அவள் செயல்களால் விளங்குகிறது.

தகைசான்ற சொல் காத்தது அதுதான் அவள் செயற்கு அரிய செயல் ஆகிறது. தன் கணவனுக்கு ஏற்பட்ட பழிச் சொல்லைப் போக்க அவள் சீறி எழுந்து வழக்கு ஆடுகிறாள்; அவனுக்கு ஏற்பட்ட பழியைப் போக்க அவள் செயல்படுகிறாள்; ஏன் மதுரையையே எரிக்கிறாள்.

மற்றைய மகளிரைப் போல் இனைந்து ஏங்கி அழாமல் ஊர் முழுவதும் தன் வழக்கை எடுத்துக் கூறுகிறாள்: அரசனிடம் சொல்லாடுகிறாள். சோர்வு இல்லாமல் செயல் படுகிறாள். இது அவள் அடுத்த பண்பு ஆகிறது.