பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி 209

இருக்கின்றன. இதனைச் சேரன் செங்குட்டுவனே அறிந்து தெரிவிக்கிறான்.

'சோழனின் ஆட்சிச் சிறப்பையும்” பாண்டியனின் தீது தீர் திறத்தையும், சேரன் செங்குட்டுவனின் வீரச் செயலையும் வெளிப் படுவதற்குக் கண்ணகி காரணமாக இருக்கிறாள், என்று அறிவிக் கிறான்.

'தென்தமிழ்ப் பாவை செய்தவக்கொழுந்து

ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி' என்று கண்ணகியைச் சாலினி கூறுவது முற்றிலும் பொருந்து கிறது.

'பார்தொழுது ஏத்தும் பத்தினி' என்று செங்குட்டுவன் தன் மதிப்பீட்டைத் தெரிவிக்கின்றான்.

இந்தக் கதைக்கு இரு துருவங்கள் என்று பெயர் தந்திருக்கலாம். நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் என்பர். அதுபோலப் பெண்ணுக்கு இரு வேறு தன்மைகள் இயல்புகள் என்று கூறலாம். அந்த இரு வேறு தன்மைகளை இரு வேறு படைப்புகளில் காட்டுகிறார் இளங்கோ.

மாதவி உலகுக்காகப் படைக்கப்பட்டவள்; அவள் முடிவு அவள் வீட்டில் அடைபடுகிறாள்; உலகம் அவளைப் போற்றியது, பின் அவளுக்காக இரங்குவார் இல்லாமல் ஒதுக்கப்பட்டு விட்டாள். கண்ணகி வீட்டுக்காகப் படைக்கப் பட்டவள். அவள் உலகத்துக்குப் புது ஒளி காட்ட உலகமே வழிபடும் தெய்வம் ஆகிறாள். இருவேறு தொடக்கம் இருவேறு முடிவுகள். இந்தக் காவியம் இந்த வகையில் இரு துருவங்கள் கொண்டது என்று கூறலாம்.

கண்ணகி மாதவி இருவருக்கும் வயது பன்னிரண்டு தொடக்கம்; பின்பு சிலயாண்டுகள் கழிந்தே கோவலனுக்கு மாதவியின் தொடர்பு ஏற்படுகிறது. எனவே வயது வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.