பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைப் பாத்திரங்கள் 221

மாதவியின் தோழி வயந்த மாலை; பாசமும் நேசமும் கொண்டு பழகுகிறாள். இந்திர விழாவில் கடலாடு காதையில் அவள் யாழை நீட்டி மாதவியிடம் தருகிறாள். அமளிமிசை, வருந்துபு நின்ற வயந்தமாலை, என்று அடிகள் குறிப்பிடு கின்றார்; அவள் வருந்தக் காரணம் என்ன? இருவருக்கும். உள்ள மனக்கசப்பை அறிந்தவள் என்ற குறிப்புத் தரப் படுகிறது. அவர்கள் நல்லிணக்கத்தில் அக்கரை கொண்டவள்; அதனால் அவள் வருந்துபு நின்றாள் என்று தெரிகிறது.

அடுத்து மாதவி தந்த முடங்கலை அவள் கோவலனிடம் தருகிறாள். அவன் மறுக்கிறான் அதற்கும் வருந்துகிறாள் 'வாடிய உள்ளத்து வசந்தமாலை' என்று குறிப்பிடப் படுகிறாள். அவள் விரைந்து சென்று உரைக்கிறாள். பின்னால் வனசாரணி வயந்தமாலை வடிவில் தோன்றி அவளை மாதவி துறந்துவிட்டாள் என்று கூறுகிறாள். அவள் கதை முடிவு அதனோடு முடிகிறது என்று தெரிகிறது.

கவுந்தி அடிகள் கோவலன் கண்ணகியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். வழிப்பயணத்துக்குத் துணையாகிறார். சோர்ந்தபோது எல்லாம் ஆறுதல் கூறுகிறார். கண்ணகியை மிகவும் பாராட்டுகிறார். 'தன்துயர் காணாத தகைசால் பூங் கொடி' என்றும், கற்புடைத் தெய்வம்' என்றும் பாராட்டு கிறார். மாதவியிடம் அடைக்கலமாக இருவரையும் ஒப்படைக் கிறார். துறவியாக இருந்த அவர் சமண அற நெறிகளை மற்றவர்க்கு அறிவிப்பதும் தம் தொழிலாகக் கொள்கிறார்.

கண்ணகிக்குத் தோழி ஒருத்தி அமைகின்றாள் தேவந்தி என்பாள்; பார்ப்பனப் பெண்; பாசாண்டச் சாத்தனை மணந்து அவனால் துறக்கப்பட்டவள்; ஆறுதலைத் தர விழைகிறாள்.

சோமகுண்டம், சூரிய குண்டம் முழுகிக் காமனைத் தொழுதால் கணவனை அடைவர் என்று கூறுகிறாள். 'பீடு அன்று' என்று கண்ணகி மறுத்துக் கூறிவிடுகிறாள் இரண்டு கலாச்சாரங்கள் முரண்பாடு இவர்கள் உரையாடல்களில் கவிஞர் பெற வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. பின்பு கண்ணகியின் மறைவிற்குப் பிறகு செய்தி கேட்டுத் துடிதுடித்துக் காவற் பெண்டையும் அடித் தோழியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்குச் செல்கிறாள். அங்கு