பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோவடிகள் 233

'தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக்கொல்' என்று மாதரி இதே கருத்தைக் கூறுவாள்.

'என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த

பொன்னே'

என்று கோவலன் கூறுவான்.

'நீணில விளக்கே’’ என்ற தொடரைக் கோவலன் எடுத் தாள்கிறான்.

மாதரியின் கூற்றிலும் விளக்கு என்ற இதே சொல் லாட்சியைக் காணமுடிகிறது.

'விழுமம் தீர்த்த விளக்குக் கொல்' என்பாள் அவள். உலகு, நிலம், பார் என்பன ஒரே பொருள் குறிப்பன. உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்றாள் சாலினி, நீள் நில விளக்கு என்கிறான் கோவலன்.

'பார் தொழும் பத்தினி' என்கிறான் சேரன் செங் குட்டுவன்

கவிஞர் எடுத்தாளும் சொற்கள் பொருள் பொதிந்தனவாக உள்ளன. அணிகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.

(e. இளங்கோவடிகள் - ஒரு ബു)

'சிந்தை செல்லாச் சேண்நெடுந்துரத்து

அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து'

என்று பெருமிதத்தோடு இளங்கோவடிகள் தம்மைப் புலப்

படுத்திக் கொள்கிறார். இவர் ஒரு துறவி, புலவர்; கலைஞர்:

கவிஞர்; அறிஞர்; இவற்றோடு அறப்பிரச்சாரகரும் ஆவார்.

'மூன்று நாடுகளுக்கும் உரிய கதை, அதைச் சொல்

வதற்கு அவர்க்குத்தான் தகுதி உள்ளது' என்று சாத்தனார் கூறுகின்றார்.அரசு பற்றிய செய்திகள் இக்காவியத்தில் பெரும்