பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள் சாதனை என்று கூறக் கூடியது தமிழ் உணர்வுக்குத் தலைமை தந்தது: மூன்று நாடுகளை இணைத்துக் காட்டியது. தமிழ் மன்னரை இகழ்ந்தவர்களை எதிர்த்து அவர்களை அடிமைப்படுத்தியது. தமிழகத்தை அவர் நேசித்து இருக்கிறார். வடவேங்கடம், தென்குமரி இடைப்பட்ட தமிழகம், அதில் அவர் கொண்டிருந்த காதல், காவிரி, வைகை, பொருநை, இவற்றில் வைத்திருந்த மதிப்பு, நாட்டு வாழ்க்கையை நூல் முழுதும் புகுத்தும் திறன் அனைத்தும் அவரை ஒரு தேசியக் கவிஞர், நாட்டுப் பற்றுடைய கவிஞர் என்று உயர்த்திக் காட்டுகின்றன. மொழிப்பற்று, நாட்டுப்பற்று இவற்றை ஊட்டுவதில் இக் காவியம் தலை சிறந்து விளங்குகிறது.

女 女 女