பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சிலப்பதிகாரம்

கோலம் கொண்ட மாதவி இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து, செந்துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல் அம்துகில் மேகலை அசைந்தன வருந்த, நிலவுப்பயண் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் 30 கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு, ஆள்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி அன்றியும்

பிறமகளிர் குடதிசை மருங்கிண் வெள் அயிர் தண்னொடு 35 குணதிசை மருங்கின் கார் அகில் துறந்து, வடமலைப் பிறந்த வாண்கேழ் வட்டத்துத், தெண்மலைப் பிறந்த சந்தனம் மறுகத் தாமரைக் கொழுமுறி, தாதுபடு செழுமலர், காமரு குவளை, கழுநீர் மாமலர், 40 பைந்தளிர்ப் படலைப் பரூஉக்காழ் ஆரம் சுந்தரச் சுண்ணத் துகளொடு அளை இச் சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை, மந்த மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக் காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த ...

கையறு நெஞ்சத்துக் கண்ணகி அம்செஞ் சீறடி அணி.சிலம்பு ஒழிய, மெண்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொண்றை முன்றில் குங்குமம் எழுதாள், மங்கல அணியிற் பிறிது அணி மகிழாள், 50 கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள், திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப், பவள வாள் நுதல் திலகம் இழப்பத், தவள வாள் நகை கோவலன் இழப்ப, 55 மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக் கையறு நெஞ்சத்துக்கண்ணகி அண்றியும்