பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 இந்திர விழவு ஊர் எடுத்த காதை

வியந்தனர். திருமகளைத் தேடித் தாமரைமலர் இங்கு வந்து புகுந்ததோ என்று பேசினர். கூற்றுவன் பெண் உருக் கொண்டு எம்மைப் பேதமைப்படுத்துகிறானோ என்றும் அஞ்சினர்; வானத்து மின்னல் மண்ணில் வந்து புரள்கிறதோ என்று வியந்து பேசினர். இத்தகைய அழகு உடையவர்கள்பால் தம்மைப் பறிகொடுத்துக் களி மகிழ்வு எய்தினர். அவர்களோடு தோய்ந்த தால் அவர்கள் மார்பில் எழுதியிருந்த தொய்யில் இவர்கள் மெய்யில் படிய அது இவர்களைக் காட்டிக் கொடுத்தது.

ஊடல் கொள்வதற்கு இந்தக் காமக் கணிகையர்தம் உறவு வீட்டு மகளிர்க்குக் காரணம் ஆகியது. ஊடலைத் தீர்ப்பதற்கு அவர்கள் பட்ட பாடு ஏட்டில் எழுத முடியாது; விருந்தினர் வந்தால் ஊடல் தீர்வர்; அதுவும் மருந்தாக அமையவில்லை; சுவைமிக்க வாழ்க்கை.

மாதவியும் கண்ணகியும்

இது இந்திர விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று; இந்நிலையில் மாதவியின் நிலை யாது? செங்கழு நீர்ப்பூ தேன்சிந்தி உகுகிறது. அது போல் இவள் சிவந்த கண்கள் உவந்த காரணத்தால் மகிழ்வுக் கண்ணிர் சொரிந்தன.

கண்ணகி அவள் கருங்கண்கள் எந்த மாற்றமும் அடையவில்லை; தனிமையில் உழந்து தளர்ந்த நிலையில் அவள் கண்ணிர் உகுத்தாள்.

மாதவியின் வலக்கண் துடித்தது; கண்ணகியின் இடக்கண் துடித்தது. இருவர் நிலைகள் முரண்பாடு கொண்டவை; ஒருத்தி மகிழ்ச்சியில் திளைத்தாள்; மற்றொருத்தி தனிமையில் தவித்தாள். இந்த மாறுபட்ட நிலைகளில் இருவரும் மகிழ்வும் துயரமும்

காட்டினர்.

6. கடற்கரை நிகழ்ச்சிகள் (கடலாடு காதை)

வித்தியாதரன் விருப்பம்

கோயில் வழிபாடுகள் ஒருபுறம்; கலை அரங்குகள்

மற்றொருபுறம். புகார் நகரம் இன்ப வெள்ளத்தில் நீந்தியது. இந்த விழாவைக் காண விண்ணவரும் வந்தனர். விஞ்சையர்கள் கலை