பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கானல் வரி

'கடற்கரைக் கானலில் அவளைப் பெண் எனக் கொண்டேன்; இல்லை; அவள் வருத்தும் தெய்வம் என்பதை இப் பொழுது அறிகின்றேன்'

'அவள் பெண் அல்ல; உயிர் உண்ணும் கூற்றுவன் ஆகின்றாள்'

'அவள் வடிவைக் கூறுவது என்றால் அவள் முகம் திங்கள்; அது வானத்து அரவு அஞ்சி இங்கு ஒளித்தது; அது தெரியாமல் பெண் என்று மயங்கிவிட்டேன்'

"அவள் கண்கள் அவை கொடுமை மிக்கவை, அருள் செய்யவில்லை; அதனால் அவை கடுங்கூற்றம் ஆகின்றன’

'கூந்தல் அழகு உடைய அவள் பெண் அல்லள்; கண்டவரை வருத்தும் அணங்கு ஆகிய தெய்வம் ஆவாள்'

"என்னை வருத்தியவை அவள் பேரழகு அவள் மொழி: வனமுலை; முகம்; புருவம்; மின்னல் இடை இவை எல்லாம் சேர்ந்து என்னை வருத்திவிட்டன”

'அவளைக் கடற்கரையில் கண்டேன்; அந்தச் சூழ்நிலை என்னை வருத்தியது; அவள் விரிந்த குழல்; மதி போன்ற முகம், கயல்போன்ற விழிகள் எல்லாம் சேர்ந்து என்னை வருத்துகின்றன’

'அவள் இளநகை, மதிமுகம், இளையவள் இணை முலைகள் என்னை இடர் செய்துவிட்டன”

'கடல் புகுந்து உயிர் வவ்வுவார் அவள் தலைவர்கள்; அவள் என் உடல் புகுந்து உயிர் வவ்வுகின்றாள்; அவள் விரும்பத்தக்க முலைகள் அவளுக்குச் சுமை; இடை அது சுமக்கிறது; இடர் உறுகிறது”

'வலையால் உயிர் கொள்வர் அவர் தலைவர்கள்; அவள் கண்ணாகிய வலையில் என் உயிரைக் கொள்கிறாள்; மின்னல்

போன்றது அவள் இடை, அது முலை சுமக்காது; இற்று விடும்”

'ஒடும் படகு கொண்டு அவள் தலைவர்கள் உயிர்களைச் சாடுவர். அவள் இடை உழந்து வருந்துகிறது; சுமை தாங்காது”

'பவள உலக்கையைக் கையால் பற்றி வெண் முத்தம்

குறுவாள்; அவள் கண்கள் குவளையல்ல; கொடியவை'