பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 269

'புன்னை நிழல் புலவுத் திரைவாய் அன்னம் நடக்க அவள் நடக்கின்றாள்; அவள் கண்கள் கூற்றம் ஆகும்'

'நீல மலரைக் கையில் ஏந்திப் பறவைகளைக் கடிவாள்; அவள் கண்கள் வேலினும் கொடிய வாட்டும் தன்மைய'

'அன்னமே நீ அவள் அருகில் செல்லாதே! அவள் நடைக்கு நீ ஒவ்வாய்; அதனால் நீ சென்று உறவு கொள்ளாதே'

அவள் கொடுமையை எடுத்துக் கூறுகிறான் தலைவன்; இச்செய்தியைக் கோவலன் பொதுப்படையாகவே வைத்து

இப்பாடல்களைப் பாடினான்.

மாதவி பாடியது

அவன் பாடிய பாடல்களில் உள்கருத்து உள்ளது என்று மாதவி தவறாகக் கொள்கிறாள். கலவியில் மகிழ்ந்தவள் போல் காட்டிக் கொள்ளுகிறாள். அதனைத் தொடர்ந்து அவன்பால் புலவி கொண்டவள் போல யாழைக் கையில் வாங்கி அவளும் பாடத் தொடங்கினாள். அவள் அப்பாடல்களுக்கு விடை தருவன போல் அமைத்துத் தருகிறாள்.

அவள் பாடலைக் கேட்டு நிலத்தெய்வம் வியப்பு எய்தியது; நீள் நிலத்தோர் மகிழ்வு எய்தினர்; யாழிசையோடு இரண்டறக் கலந்த தன் இனிய குரலில் அவள் பாடினாள்.

அவன் பாடிய ஆற்று வரிப் பாடல்களுக்கு இவள் விடை தந்தாள். 'ஆண்கள் சீரோடு இருந்தால்தான் பெண்களுக்கு மதிப்பு உண்டு' என்று தெரிவித்தாள்.

அதே போலக் கானல் வரிப்பாடல்களையும் இவளும் தொடர்ந்து பாடுகிறாள்; அவன் பாடிய பாடல்கள் அனைத்தும் பெண் கொடியவள் என்ற கருத்தை வற்புறுத்திக் கூறுவன போல அமைந்தன. அதற்கு இவள் மறுப்புரையாக 'ஆண்கள் தாம் இரக்கமற்றவர்கள்; பெண்களின் நுண்ணுணர்வையும், துன்பத்தையும் அறியாதவர்கள்' என்று சாடுகிறாள். அப்பாடல்கள் கருத்துகள் பின் வருமாறு:

'முத்துகள் தந்து எங்களைத் தலைவன் மயக்க விரும்புகிறான்; அவை அவள் பல்லுக்கு நிகராகா: கடல் அலைகள் கரை சேர்க்கும் முத்துகளே எங்களுக்குப் போது