பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 கொலைக் களக் காதை

இவன்' என்றும், "அவன் துயர் தீர்த்த கன்னி நப்பின்னை இவள்' என்றும் கூறிப் பாராட்டினர். ஐயையும் அவள் தாயும் விம்மிதம் எய்தினர். "கண் கொள்ளாக் காட்சி இங்கு நமக்கு இவர்' என்று கூறிப்பாராட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவலன் கழிவிரக்கம்

அவன் உணவு உண்டு இனிது இருந்தான். அவனுக்கு வெற்றிலையும் பாக்கும் தந்தனள். அவற்றைத் தந்த கண்ணகியை அருகில் அழைத்தான். 'உன் மெல்லடிகள் கற்கள் பொருந்திய வழியை எவ்வாறு கடக்க முடிந்தன?' என்று கூறிக் கொடிய காட்டுவழியில் அவளை அழைத்து வந்ததற்காக வருந்தினான். 'எம் பெற்றோர்கள் இதற்காக வருந்தியிருப் பார்கள்; எல்லாம் புதிராக இருக்கிறது, இது வினையின் விளைவோ அறியாமல் திகைக்கின்றேன். வறுமொழி யாளருடனும், புதிய பரத்தையருடனும் திரிந்து கெட்டேன். அவர்கள் நகைச்சிரிப்பு என்னைப் பாழ்படுத்தியது; அறிஞர் பெருமக்கள் அறிவுரைகளை மறந்தேன். எனக்கு நன்னெறியே அமையாது; தீமை செய்து உழன்றேன்; எனக்கு நன்மையே வாய்க்காது'.

"என் பெற்றோர்கள் இருவருக்கும் அவர்கள் முதிய பருவத்தில் பணிவிடை செய்யவேண்டும்; அதை மறந்து விட்டேன். பிழைபல செய்துவிட்டேன். பேரறிவு படைத்த உனக்கும் தீமை செய்து விட்டேன்; எண்ணிப்பார்க்கவில்லை; அவசரப்பட்டு உன்னையும் உடன்வருக என்று கூறிவிட்டேன்; இது தவறு என்று எண்ணாமல் செயல்பட்டு விட்டேன்; 'மாநகர்க்கு இங்கு வருக' என்று கூறினேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்பொழுது உணர்கிறேன்; 'எழுக' என்றேன். உடன் மறுப்புக் கூறாமல் உடன் வந்துவிட்டாய்;. நீ செய்தது அதை நினைத்துப் பார்க்கிறேன். நீயாவது தடுத்து இருக்கலாம்; அதைச் செய்யாது விட்டாய்” என்று கழிவிரக்கம் காட்டி மனம் நெகிழப் பேசினான்.

கண்ணகி மாற்றம்

'இதுவரை எதிர்த்துப் பேசியது இல்லை. 'ஏன் நீ தடுத்து இருக்கக் கூடாது?" என்று அவன் கேட்டதற்கு அவள் தன்