பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 321

அவன் அடக்கமாக அணுகிப் பதில் உரைத்தான். 'அறியேன்; எனினும் அரசனது முடிக்கலன் சமைப்பேன் யான்' என்றான். பொதித்து வைத்த காற்சிலம்பை அவன் முன் அவிழ்த்தான். காலன் இதை எதிர்நோக்கிக் காத்திருந்தது போல் அந் நிகழ்ச்சி அமைந்தது; வயிரமும் மணியும் பொதித்த அந்தச் சித்திரச் சிலம்பின் செய்கை எல்லாம் விரும்பிப் பார்ப்பதைப் போல் நடித்தான். 'கோப்பெருந்தேவிக்கே இது அமையும்” என்று சிறப்பித்துக் கூறி அரசனுக்கு இதனை அறிமுகப் படுத்துவதாகக் கூறினான்.

திரும்பி வரும்வரை அவனைத் தன் சிறுகுடிசையிலே இருக்குமாறு கூறினான். கொல்லன் கூறியதை நம்பினான். சிலம்பு கோவலன் கையிலேயே விட்டுச் சென்றான். அவன் அந்தக் கொல்லன் இல்லத்துக்கு அருகில் இருந்த கோயிலின் ஒரு புறம் ஒதுங்கிக் காத்து இருந்தான்.

அரசியின் காலணியை ஏற்கனவே களவாடி இருந்தான். அதனின்று இப் புதிய மனிதனைக் கொண்டு தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டான். அதனை அவன் வெளிக் காட்டாமல் அரசனைச் சந்திக்கச் சென்றான்.

கொல்லன் சூழ்ச்சி

அவனுக்குத் தக்க சூழல் அங்கு உருவாகி இருந்தது. அந்தப்புரம் நோக்கி நாட்டு அரசன் அடியெடுத்து வைத்தான்.

அமைச்சர்கள் உடன் செல்லவில்லை. ஏவல் சிலதியர் காவல் மன்னனைத் தொடர்ந்து சென்றனர்.

அரசி இவனிடம் ஊடல் கொண்டிருந்தாள். ஆடல் மகளிர் பாடிய மதுர இசையும், மகிழ்வு ஆடலும் மன்னவன் மனத்தைக் கவர்ந்தன. அருகிருந்த அரசி அதனைக் கண்ணுற்றாள். அதனால் நெஞ்சு புண்ணுற்றாள்; புலவி கொண்டாள். தலைவலி தனக்கு என்று அவனிடம் முரண்கொண்டு கூடுதல் தவிர்த்தாள். அவளை ஆற்றுவிக்கும் ஆவலில் அவன் அணுகினான். வேகமாகச் சென்ற அவன் தன் விவேகத்தை இழந்தான். அதனால் கோப் பெருந்தேவியின் அந்தப்புரம் நோக்கி அவன் சென்றான்.

அவ்வேளை பார்த்து அரசனை வணங்கிக் கொல்லன் தொடர்ந்தான். ஏத்திப் புகழ்ந்தான். கீழே விழுந்து தவழ்ந்தான். "கள்வன் ஒருவன்; அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்தவன்;