பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 329

18. துன்பச் செய்தி

(துன்ப மாலை)

குரவை பாடி முடிந்தது. பின் மாதரி வையை ஆற்றின் நீர்த்துறைக்குச் சென்று நீராடித் திருமாலுக்குப் பூவும், சந்தனமும், நறும் புகையும், மாலையும் சாத்தச் சென்றிருந்தாள். அந்த நேரத்தில் அவள் ஆயர் சேரியில் இருக்கவில்லை.

குரவைக்கூத்து முடிந்ததும் அலறிஅடித்துக் கொண்டு ஊரில் இருந்து ஒருத்தி அங்கு வந்து செய்தி கூறத் தொடங் கினாள். அவள் அச்செய்தியைச் சொல்ல முடியாமல் தயங்கி னாள். அவள் வாயில் சொற்கள் வெளிவரவில்லை.

கண்ணகிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ துயரச் செய்தி அவள் சொல்ல வந்திருக்கிறாள் என்பதை மட்டும் அவளால் அறிந்து கொள்ள முடிந்தது. இவள் பதறினாள்; கதறினாள், அதிர்ச்சியுற்றாள். ஐயையை நோக்கி ஐயத்தை எழுப்பினாள்; 'நடந்தது யாது?' என்று வினவினாள்.

'ஊருக்குச் சென்ற காதலன் என்ன ஆயினான்? அவன் வந்திலன்; என் நெஞ்சம் கவல்கின்றது: யாரோ ஏதோ கூறினார்கள்; அவர்கள் சொல்ல வந்த செய்தி யாது?’ என்று ஐயையை வினவினாள்.

'நண்பகல் பொழுதே எனக்கு ஐயம் தோன்றியது; நடுங்கினேன்; என்ன? ஏது? அவர்கள் கூறியது யாது? விரைவில் கூறுக’ என்று மேலும் பதறினாள்.

'யாரோ எவரோ வஞ்சம் இழைத்துவிட்டார்கள்; சூழ்ச்சிக்கு அவர் இரையாகி விட்டாரா? ஒன்றும் விளங்க வில்லை. அந்த ஊரவர் பேசிய உரை யாது? விளம்புக; ஐயையை நோக்கித் தொடர்ந்து கேட்டாள்; அதற்குமேல் ஐயை யால் அடங்கி இருக்க இயலவில்லை. தனக்குத் தெரிந்ததைக் கண்ணகிக்குத் தெரியப்படுத்தினாள்.

'அரசிக்கு உரிய அணி ஒன்றை அபகரித்தான் ஒரு கள்வன்; அவனை அரசனின் ஆட்கள் கொலைசெய்து விட்டனர்” என்று தெரிவித்தாள்.