பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 353

அதற்குச் சேரன் தன் பெருமை தோன்றக் கண்ணகிக்கு எங்கிருந்து கல் எடுப்பது தகுதி வாய்ந்தது என்பதைத் தக்க காரணம் தந்து கூறினான்.

'பொதிகையில் கல் எடுத்துக் காவிரியில் நீர்ப்படுத்தல் போதுமானது தான்; ஆனால் அது எளியவர் செய்வது; வலிமைமிக்கவர், புகழ்மிக்கவர், ஆற்றல் மிக்கவர் அதனை ஏற்று நடத்துவது தக்கது அன்று. வீர மன்னன் செய்யும் விவேகமான செயல் ஆகாது. இமயத்தினின்று கல் கொணர்தலே தக்கது ஆகும். வடநாட்டு வேந்தர் இடக்கு ஏதாவது செய்தால் அவரை ஒடுக்குவது தவிர வேறு வழியே இல்லை; தவம் மிக்க அந்தணர் முன் சடங்கின்படி கல்லைக் கண்ணியமாகத் தரவேண்டும்; மறுத்தால் அவர்களை ஒறுப்பது தவிர வேறு வழியே இல்லை. சரித்திரம் அவர்களுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்கும்; தமிழ்ப் போர்த்திணைகள் புறத்திணைகள் அவர்கள் அறியட்டும்; காஞ்சித்திணை என்பது நிலையாமையை உணர்த்துவது ஆகும். வாழ்க்கை சிறந்த குறிக்கோள் கொண்டது. அத்தகைய குறிக்கோள் அற்றவர் வாழ்ந்து என்ன பயன்? முதியவர்கள் பலர் மண்ணில் மறைந்துவிட்டனர். அவர்கள் உணர்த்துவது யாது? வாழ்க்கை நிலையற்றது என்பது அறியத்தக்கது ஆகும்; அந் நிலையாமை அறத்தை நூல்கள் காட்டத் தேவை இல்லை. என் வாள் அவர்களுக்குக் காட்டும்; வாழ்க்கை நிலையற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள்.”

"அவர்களை உணர வைப்பது உறுதி; மகளை மறுத்தவன் இமய அரசன், பார்வதி அவளைப் பரமசிவன் வீரம் காட்டி மணந்தான். அவனைப் பணிய வைத்தான்; அது மகட்பால் காஞ்சி என்பர்; மற்றும் எம்முன்னவர் இமயம் சென்று விற்கொடியைப் பொறித்த நாள் எதிர்த்த மன்னர் எரி சாம்பல் ஆயினர்; இது வரலாறு கற்பித்த பாடம் ஆகும். காஞ்சித் திணையை அவர்கள் உணர்ந்தனர். ஒழிந்தோர் மற்றவர்க்குக் காட்டிய பொதுக்காஞ்சி, மகட்பால் காஞ்சி, நீள்மொழிக் காஞ்சி ஆகிய இம்மூன்று காஞ்சிகளையும் காண நேரிடும்.

y

'பகைவர்கள் காஞ்சி காண்பர்; யாம் வஞ்சி சூடுவோம்’ என்று சேரன் வஞ்சினம் மொழிந்தான். வஞ்சித் துறைகளுள் வெற்றிச் சிறப்பைக் கூறவது 'நெடுமாராய வஞ்சி'; வெற்றி