பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 361

உச்சியினின்று பத்தினிக் கடவுளுக்குக் கல்லைக் கொண்டுவரச் செய்தான்.

27. கங்கையில் நீராட்டுதல்

(நீர்ப்படைக் காதை)

வட பேர் இமயத்தில் கடவுள் பத்தினிக்குக் கல்லைக் கொண்டு வந்த பின்பு கனக விசயர்தம் கதிர்முடிமேல் ஏற்றிக் கொண்டு வந்தான். தென் தமிழ் ஆற்றல் அறியாது வந்து மலைந்த ஆரிய மன்னரையும், அவனுடன் வந்த படை வீரர்களையும் கொன்று குவித்தான். இந்த வெற்றிச் செய்தி எட்டுத் திசையும் பேசப்பட்டது.

இதற்கு முற்பட்ட போர்கள் யாண்டுகளில் நடந்தன; மாதங்களில் நிகழ்ந்தன; நாட்களில் நடைபெற்றன; அவற்றிற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட காலம் ஒவ்வொன்றுக்கும் பதினெட்டு எனக் கூறப்பட்டது. ஆண்டுகளிலும், மாதங் களிலும், நாட்களிலும் நிகழ்ந்த போர்கள் அவற்றை நோக்க இது நாழிகைகளில் முடிவு பெற்றது. பதினெட்டே நாழிகையில் இப்போர் தொடங்கி முடிவும் பெற்றது. சாதனைகளில் இது மற்றவற்றை விட விஞ்சி விட்ட செய்தி, வரலாற்று நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றது. ஒரே பகலில் முடித்த போர் இது என்று தடித்த எழுத்துகளில் எழுதப்பட்ட செய்தி இது.

செங்குட்டுவன் தன் மாபெருஞ் சேனையுடன் கங்கைப் பேர் யாற்றுக் கரையை அடைந்தான். பத்தினிக் கடவுளுக்கு வேதியர்களைக் கொண்டு நீர்ப் படுத்தித் தூய்மை செய்து விழா எடுத்தான். மஞ்சனநீர் ஆட்டி வெஞ்சின வேந்தன் வெற்றி விழா எடுத்தான். அவன் அமர்ந்து வீரர்களுக்குப் பரிசு தர மண்டபம் அமைத்துக் கொடுத்தனர். அவன் தங்குதற்கு ஏற்ற வகையில் அரண்மனைகளையும், மணி மண்டபங்களையும், பொன்னால் புனையப்பட்ட மேடை அரங்குகளையும், அழகிய பந்தர் களையும், பள்ளி அறைகளையும், பூஞ்சோலைகளை யும், மலர்ப் பொய்கைகளையும், இசைப் பாடல்கள் இருந்து